காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்துக்கு வெண்கலப் பதக்கம் - கலப்பு இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றது சவுரவ் கோஷல் - தீபிகா பல்லிகல் ஜோடி

Aug 8 2022 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் தொடரின் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியிலும் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் எல்தோஸ் பால் 17.03 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் 17.02 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து அசத்தினர். காமன்வெல்த் போட்டிகளில் ஒரே பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இதேபோல் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிக்கத் சரீன், அயர்லாந்து வீராங்கனை மெக்னாலை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சரத்கமல்-சத்யன் ஞானசேகரன் ஜோடி, இங்கிலாந்தின் Paul Drinkhall-Liam Pitchford ஜோடியை தோற்கடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00