22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார்

Aug 8 2022 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லீயை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர்-1 வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லி ஆகியோர் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் 19 தங்கமும், 15 வெள்ளியும், 22 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. இன்றுடன் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00