காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்‍கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Aug 9 2022 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கப்பதக்‍கம் வென்றுள்ளதற்கு, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் பேட்மிண்டன் மகளிர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கப்பதக்‍கம் வென்று அசத்தியுள்ளார் - இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் தனது முதல் தங்கப்பதக்‍கத்தை வென்றுள்ள பி.வி.சிந்துவுக்‍கு, தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்‍கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பெற்ற வெற்றியின் மூலம், காமன்வெல்த் பதக்‍கப் பட்டியலில் இந்தியா 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் உள்ளிட்ட 56 பதக்‍கங்களை வென்று, 4-வது இடத்திற்கு முன்னேறியிருப்பது, நம் அனைவருக்‍கும் பெருமை அளிப்பதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் வென்றுள்ள நம் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்‍கும் தமது உளம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்‍கொள்வதுடன், அவர்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்தியாவுக்‍குப் பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00