காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் : 61 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா

Aug 9 2022 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதேபோல், டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர்-1 வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல்லி ஆகியோர் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார்.

இதேபோல், காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தங்கம் வென்றார். இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சே யாங்கை, 19-21, 21-09, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இங்கிலாந்து இணையை தோற்கடித்து இந்திய வீரர்கள் சாத்வீக், சிராக்செட்டி இணை தங்கம் சென்று அசத்தினர். டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து வீரர் டிரிங் ஹாலை தோற்கடித்து, தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல், டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் லியாமை 4-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, தமிழக வீரர் சரத் கமல் தங்கம் வென்றார்.

ஆடவர் ஹாக்‍கி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 7-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. வெள்ளிப் பதக்‍கம் வென்றது இந்திய அணி.

இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.

தங்கம் வென்ற சிந்து மற்றும் லக்‍ஷயா சென் குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00