ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் - இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி

Sep 12 2022 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசியக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இலங்கை அணி கோப்பையைத் தட்டிச்சென்றது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்சே 71 ரன்கள் விளாசினார்.

இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் வலுவான ஆட்டத்தை வழங்கினாலும், இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வான் 49 பந்துகளில் அரைசதம் கடந்து 55 ரன்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து வந்த பாபர் அஸாம், நவாஸ், குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி உள்ளிட்டோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது. இதன் மூலம் இலங்கை அணி 6வது முறையாக டி-20 ஆசியக் கோப்பையை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00