தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி : பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,100 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Sep 20 2022 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி திருச்சியில் இன்று தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 100 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி கே.கே. நகரில் உள்ள ரைஃபில் கிளப்பில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி இன்று தொடங்கியது. திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் இந்த போட்டியை தொடக்கி வைத்தார். வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 100 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் டெல்லியில் தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 24 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00