இங்கிலாந்துக்‍கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய மகளிர் கிரிக்‍கெட் அணி அபார வெற்றி

Sep 22 2022 7:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய அணியில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்து அசத்தினார். அவர் 143 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்‍காமல் இருந்தார். இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 44.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2க்‍கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00