இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் - 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் அணி

Sep 25 2022 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, தொடரையும் வென்றுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 45.4 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சா்மா ஆகியோர் அரைசதம் அடித்தனா். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியினர், இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தவிர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்படி, 43.3 ஓவர்களில் 153 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. இதன்படி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிர் அணி, 3-0 என தொடரையும் ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், ஜுலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்தப் போட்டியுடன் இந்திய மகளிர் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவா் களத்தில் இருந்து வெளியேறிய போது, இங்கிலாந்து அணியினா் இருபுறமும் நின்று கைதட்டி மரியாதை அளித்தனா்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00