தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி - 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி

Oct 3 2022 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்துகளில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அரை சதம் அடித்த ராகுல், 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். போட்டியில் 19 ரன்களை எடுத்த நிலையில் விராட் கோலி டி-20 போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 22 பந்துகளில் 61 ரன்களில் குவித்து ரன் அவுட் ஆனார். இறுதியில் விராட் கோலி 49 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது.

இதனைத்தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியினர் களமிறங்கினர். கேப்டன் பவுமா, அடுத்து களமிறங்கிய ரூசோவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து டி காக்குடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் 33 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக டி காக்குடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். வாணவேடிக்கை காட்டிய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். இறுதியில் டி காக் 69 ரன்களுடன், டேவிட் மில்லர் 106 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்படி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2- 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00