ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி வர மறுத்தால் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காமல் புறக்‍கணிப்போம் : இந்தியாவுக்‍கு பாகிஸ்தான் கிரிக்‍கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராசா நிபந்தனை

Nov 26 2022 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்தால், நாங்கள் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காமல் புறக்‍கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்‍கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராசா தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால், யார்தான் உலகக் கோப்பையை பார்ப்பார்கள். பாகிஸ்தான் அணி தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும், இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தினோம் என்றும், தாங்கள் நல்ல பார்மில் இருப்பதால்தான், இது சாத்தியமானது எனவும் அவர் கூறினார். இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆசியக் கோப்பையில் பங்கேற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு அடுத்து உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதால், ஆசியக் கோப்பை விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்‍கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00