19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை

Jan 30 2023 7:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.

முதல்முறையாக நடைபெற்ற இத்தொடரின் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 17 புள்ளி ஒன்று ஓவரில் 68 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 14 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக சவுமியா திவாரி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. 2007ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய ஆடவர் அணி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் டி-20 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அதன்பின்பு, தற்போது ஷபாலி வர்மா தலைமையிலான ஜுனியர் இந்திய மகளிர் அணி, முதல் டி-20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00