உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி

Mar 13 2023 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால், உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பின்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் வாய்ப்பு உறுதியானது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் நியூசிலாந்து வெற்றி பெற 285 ரன்கள் தேவை என்ற நிலையில், 8 விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சிறப்பாக பேட்டிங் செய்த கனே வில்லியம்சன் அவுட்டாகாமல் 121 ரன்கள் குவித்து தங்களது அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. இறுதி போட்டிக்குள் நுழைவதில் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே புள்ளிப்பட்டியலில் போட்டி நிலவி வந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்வியை தழுவ இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00