ரசிகர்களுடன் இணைந்து சாலையில் கிரிக்கெட் விளையாடிய டேவிட் வார்னர் - ரசிகர்கள் மகிழ்ச்சி
Mar 16 2023 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், மும்பை மாநகர சாலையில் கிரிக்கெட் ரசிகர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. டீ ஷர்ட், ஷார்ட்ஸ் சகிதமாக பேட்டிங் செய்த வார்னருக்கு, இளைஞர் ஒருவர் பால் போட Defence ஷாட் ஆடிய வார்னர், அந்த வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வார்னர் பகிர்ந்த வீடியோவை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள், இந்தியா மீதான வார்னரின் பாசத்தை கண்டு மகிழ்வதாகவும், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.