காயம் காரணமாக வில் ஜாக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல் : வில் ஜாக்சுக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க பெங்களூரு அணி திட்டம்
Mar 16 2023 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காயம் காரணமாக பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ், வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான வில் ஜாக்சை, நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால், வரும் 31ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில், அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது சதைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் இருந்து வில் ஜாக்ஸ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை அணியில் சேர்க்க பெங்களூரு அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.