இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு சின்னர் முன்னேற்றம் : காலிறுதியில் 6-4, 4-6, 6-4 என்ற செட்கணக்கில் ஃபிரிட்சை வீழ்த்தி அபாரம்
Mar 17 2023 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியின் ஜானிக் சின்னர் முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சும், தரவரிசையில் 13 வது இடத்தில் உள்ள ஜான் சின்னரும் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், 6-4, 4-6, 6-4 என்ற செட்கணக்கில் ஃபிரிட்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.