இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் காலிறுதியில் அல்காரஸ் வெற்றி : நாளைய அரையிறுதியில் அல்காரஸ் - சின்னர் மோதல்
Mar 17 2023 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றுள்ளார். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இப்போட்டியில், உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள அல்காரஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே தனது அபார சர்வீஸ்கள் டூலும் அலியாசிமை திணறடித்த அல்காரஸ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், ஜானிக் சின்னரை, அல்காரஸ் எதிர்கொள்ளவுள்ளார்.