ஆஸி.க்‍கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Mar 18 2023 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், 5 விக்‍கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் மிரட்டலான பந்துவீச்சால் 188 ரன்களுக்‍கு ஆல்அவுட்டானது. இந்தியா தரப்பில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர், 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்‍குடன் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்‍கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்‍காமல் ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் எடுத்து வெற்றிக்‍கு வித்திட்டனர். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்‍கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00