டி-20 தொடரில் பாக்.கிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஆப்கன் : 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்ற ஆப்கன் தொடரை வென்றது

Mar 27 2023 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கனிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் தோற்ற நிலையில் நேற்று 2-வது டி-20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அயூப் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கனிஸ்தான் 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இறுதி கட்டத்தில் பரபரப்பாக சென்ற போட்டியில் ஆப்கன் அணியின் நஜிபுல்லா ஜட்ரன் 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00