இன்று நடைபெறும் ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் லக்னோ - மும்பை அணிகள் பலப்பரீட்சை .... குஜராத் அணியுடன் குவாலிஃபையர் இரண்டாவது போட்டியில் மோதப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

May 24 2023 8:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் லக்னோ அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? என்பதனை தற்போது பார்க்கலாம்.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், லக்னோ அணி மோத உள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள், 6 தோல்விகள் என 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தது. அந்த அணியின் பந்துவீச்சை பொருத்தவரை பலவீனமாக இருந்தாலும், 200 ரன்கள் அடித்தாலும் அதனை சேஸ் செய்யும் அளவிற்கு பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது.

குருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ அணி கடந்த ஆண்டுதான் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனது. இருப்பினும் அறிமுகமான ஆண்டே இறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. நடப்பு தொடரை பொருத்தவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, 8 வெற்றிகள் 5 தோல்விகள் என புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இதுவரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருவது அந்த அணியின் பலமாகும். நடப்பு தொடரை பொருத்தவரை லீக் சுற்றில் இரு அணிகளும் ஒரு முறை மோதின. இதில் லக்னோ அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இரண்டு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், லக்னோ அணியே வெற்றி வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00