மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 போட்டி அரையிறுதிக்‍கு பி.வி.சிந்து முன்னேற்றம் : சீன வீராங்கனை யி மான் ஜாங்கை வீழ்த்தி தகுதிப் பெற்றார்

May 26 2023 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் யி மான் ஜாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். போட்டியின் ஆறாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் குறைந்த ஜாங்கை வீழ்த்தினார். உலகத் தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள சிந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து ஓபனில் 18வது இடத்தில் உள்ள ஜாங்கிடம் 32-வது சுற்றில் தோல்வியடைந்ததற்குப் பழிவாங்கினார். இதனைத்தொடர்ந்து சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஏழாம் நிலை வீராங்கனையும், உலகின் 9ம் நிலை வீராங்கனையுமான இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை பி.வி.சிந்து எதிர்கொள்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00