ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி : 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்
Sep 16 2023 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 83 பந்துகளில் 174 ரன்களும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 82 ரன்களும் விளாசினர். பின்னர், 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், தென்ஆப்பிரிக்கா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.