ஆசிய கோப்பை இறுதிபோட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடித்த முகமது சிராஜ் - 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
Sep 17 2023 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் முகமது சிராஜின் மிரட்டலான பந்துவீச்சால் இலங்கை அணி, 50 ரன்களில் சுருண்டது.
இந்திய - இலங்கை அணிகள் மோதும் ஆசிய கோப்பை இறுதி போட்டி, கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பத்தும் நிசங்காவும், குசால் பெரேராவும் களமிறங்கினர். முதல் ஓவரை அற்புதமாக வீசிய இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் பும்ரா, தனது 3வது பந்தில் குசால் பெரேராவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
இதையடுத்து ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசிய முகமது சிராஜ், நான்கு வீக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை நிலைகுலைய செய்தார்.
தொடர்ந்து இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த இலங்கை, 15 புள்ளி 2 ஓவரில் 50 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.