அமெரிக்காவின் 3 நகரங்களில் நடக்கிறது டி20 உலகக்கோப்பை : டல்லாஸ், புளோரிடா, நியூயார்க்கில் நடக்கும் என ஐசிசி தகவல்
Sep 20 2023 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி20 உலகக்கோப்பை அமெரிக்காவின் 3 நகரங்களில் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளன. இந்தநிலையில் அமெரிக்காவில் டி20 போட்டிகள் நடைபெறும் நகரங்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி, புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி மற்றும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.