வங்கதேச கிரிக்கெட் வீரர் உட்பட 8 பேர் மீது புகார் : ஊழல் தடுப்பு விதியை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றச்சாட்டு
Sep 20 2023 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊழல் தடுப்பு விதியை மீறியதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் உட்பட 8 பேர் மீது ஐசிசி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சித்தல், ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளாது. இதனால், புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு விதியை மீறியதாக ஐசிசி குற்றஞ்சாட்டியுள்ளது.