உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்திய அணியை ஊக்குவிக்கும் வகையில் துணை ராணுவப்படை வீரர்கள் கோஷம் எழுப்பி அசத்தல்
Nov 19 2023 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்ல வேண்டி, நாடு முழுவதும் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். இந்திய அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற ஊக்குவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீரில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் தேசியகொடியை கையில் ஏந்தியவாறு ஜீதேகா பாய் ஜீதேகா என்ற கோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.