இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு : கோப்பையுடன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்
Nov 20 2023 10:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த சிறிது நேரத்திலேயே, நாடு இன்றும், எப்போதும் உங்களுடன் நிற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பை போட்டியின் மூலம் உங்கள் திறமை மற்றும் உறுதிப்பாடு குறிப்பிடத்தக்கது என்றும் நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்கு மகத்தான பெருமை சேர்த்திருக்கிறீர்கள் என்றும் பாராட்டியுள்ளார். மேலும் மற்றொரு பதிவில், பிரமாண்டமான உலகக் கோப்பை வெற்றிக்காக ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள் என்றும் அவர்களின் பாராட்டுக்குரிய செயல்திறன், ஒரு அற்புதமான வெற்றியின் உச்சக்கட்டத்தை எட்டியதாக வாழ்த்தியுள்ளார்.