உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியால் மனமுடைந்த விராட் கோலி -ஆரத்தழுவி ஆறுதல் கூறிய மனைவி அனுஷ்கா சர்மா
Nov 20 2023 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த விராட் கோலியை ஆரத்தழுவி அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறும் காட்சி வைரலாகி வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் கோப்பையை தவறவிட்ட விரக்தியில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி மனமுடைந்து காணப்பட்டார். அவரை அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆரத்தழுவி கட்டியணைத்து ஆறுதல் கூறியது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.