இந்திய வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த வீடியோ வெளியானது : விராட் கோலி, ரோகித் ஷர்மா, முகமது ஷமியை கட்டியணைத்து தேற்றிய பிரதமர்
Nov 21 2023 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு கிரிக்கெட் வீரர்களை பிரதமர் மோடி சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி கடந்த 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனால், ஓய்வறையில் இந்திய அணி வீரர்கள் மனமுடைந்து காணப்பட்டனர். அப்போது, அவர்களை பிரதமர் மோடி சந்தித்து, வீரர்களிடம் கைக்குலுக்கி ஊக்குவித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.