இந்தியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வென்று ரஷ்யாவின் எலினா வெஸ்னினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Mar 17 2017 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வென்று ரஷ்யாவின் எலினா வெஸ்னினா முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன்வெல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் BNP Paribas சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டிகள், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை எதிர்கொண்டார். இப்போட்டியில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வென்ற வெஸ்னினா, 2-வது செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். எனினும் 3-வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்னினா, 6-3 என்ற கணக்கில் வென்று வீனசுக்கு அதிர்ச்சியளித்தார். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இப்போட்டியின் முடிவில், 6-2, 4-6, 6-3 என்ற செட்கணக்கில் வெஸ்னினா வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு வெஸ்னினா முன்னேறியுள்ளது இதுவே முதல்முறையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00