ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அலைச்சறுக்கு போட்டி - சீறி எழுந்த அலைகளில் லாவகமாக சறுக்கி, திறனை வெளிப்படுத்திய முன்னணி வீரர்கள்

Mar 18 2017 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி தொடங்கியுள்ளது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தங்கக்கடற்கரையில் அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், நடப்பு உலகச் சாம்பியன் ஜான் ப்ளாரன்ஸ் உட்பட 34 வீரர்களும், 17 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 3 முதல் 5 அடி வரை அலைகள் ஆக்ரோஷமாய் எழும்பிய போதிலும், வீரர்கள் லாவகமாக அதனை கடந்து அலைச்சறுக்கில் ஈடுபட்டனர். பலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து சென்றதை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். இறுதிச்சுற்று போட்டிகள் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. அலைச்சறுக்கு போட்டிகளை காண ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00