இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி : எலினா வெஸ்னினா - குஸ்நெட்சோவா மோதல்

Mar 18 2017 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் எலினா வெஸ்னினா - குஸ்நெட்சோவா ஆகியோர் மோதுகின்றனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், இந்தியன் வெல்ஸில் நடைபெற்றுவரும் ஓபன் டென்னிஸ் போட்டிகள், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், ரஷ்யாவின் குஸ்நெட்சோவா, செக்குடியரசின் கரோலினா ப்லிஸ்கோவாவை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குஸ்நெட்சோவா, 7-6, 7-6 என்ற நேர் செட்கணக்கில் ப்லிஸ்கோவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவும், ஃபிரான்சின் Kristina Mladenovic-ம் மோதினர். இப்போட்டியில் Mladenovic-ஐ திணறடித்த வெஸ்லினா, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதன்மூலம், இந்தியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ள வெஸ்னினா, நாளை நடைபெறும் பைனலில் சகநாட்டு வீராங்கனை குஸ்நெட்சோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00