டெஸ்ட் பந்துவீச்சளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்து அபாரம் - டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறினார் புஜாரா

Mar 21 2017 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இரட்டை சதம் விளாசிய புஜாரா, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, 899 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வினுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்த ஜடேஜா, அண்மையில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட்டுகளை எடுத்தன் மூலம் தற்போது தனித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், பிஷன்சிங் பேடி, அஸ்வினுக்குப் பிறகு, தனித்து முதலிடத்தைப் பிடிக்கும் 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சிறப்பை ஜடேஜா பெற்றுள்ளார். அதேவேளையில், ராஞ்சி டெஸ்ட்டில் சோபிக்காத அஸ்வின், 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதேபோல், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் விளாசிய இந்தியாவின் புஜாரா, முதல்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட்டில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் கோலி, 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00