மொனோகா நாட்டில் நடைபெற்று வரும் மான்டி கார்லோ மாஸ்டர் டென்னிஸ் தொடரின், 3-வது சுற்றில் ஸ்பெயினின் வினோலஸிடம் உலகின் முதல் நிலை வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

Apr 21 2017 9:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
மொனோகா நாட்டில் நடைபெற்று வரும் மான்டி கார்லோ மாஸ்டர் டென்னிஸ் தொடரின், 3-வது சுற்றில் ஸ்பெயினின் வினோலஸிடம் உலகின் முதல் நிலை வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்தார். எனினும், முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நடால் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

மொனாக்கோ நாட்டின் மான்டே கார்லோ நகரில் நடைபெற்றுவரும் இத்தொடரின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில், 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலகின் முதல்நிலை வீரருமான பிரிட்டனின் ஆண்டி முர்ரேவும், தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலஸு மோதினர். இப்போட்டியின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய முர்ரே, 6-2 என்ற செட்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். எனினும் முர்ரேவுக்கு எதிராக சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினோலஸ், 6-2, 7-5 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் வென்று அதிர்ச்சியளித்தார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், வினோலஸ் 2-6, 6-2, 7-5 என்ற செட்கணக்கில் முர்ரேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் Pablo Carreno Busta-வை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச்சும், 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் Busta-வும் வென்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இரு வீரர்களும் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்றார். முடிவில், 6-2, 4-6, 6-4 என்ற செட்கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல், ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஜெர்மனியின் Alexander Zverev-வை 6-1, 6-1 என்ற நேர் செட்கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, உருகுவேவின் Pablo Cuevas-யிடம் 4-6, 4-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00