அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மோட்டோ GP மோட்டார் சைக்கிள் பந்தயம் - தொடர்ந்து 5-வது முறையாக வெற்றிவாகை சூடி நடப்பு உலக சாம்பியன் Marc Marquez அபாரம்

Apr 24 2017 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மோட்டோ GP மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினின் Marc Marquez, தொடர்ந்து 5-வது முறையாக வெற்றிபெற்று முத்திரைப் பதித்தார்.

சர்வதேச அளவில் பிரசித்திப்பெற்ற அதிவேக GP சாம்பியன் பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம், 18 சுற்றுகளாக நடைபெறுகிறது. இதன் 3-வது சுற்றுப் பந்தயம், அமெரிக்காவின் Austin நகரில் இன்று நடைபெற்றது. அமெரிக்காஸ் கிராண்ட் ப்ரீ என்ற பெயரில் நடைபெற்ற இப்பந்தயத்தில், 3 முறை உலக சாம்பியனான ஹோண்டா அணியைச் சேர்ந்த ஸ்பெயினின் Marc Marquez, இத்தாலியின் Valentino Rossi ஆகியோரிடையும் கடும் போட்டி நிலவியது. இதில், மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்ற Marquez, முதலிடம் பிடித்து அசத்தினார். இதன்மூலம், அமெரிக்காஸ் கிராண்ட் ப்ரீயில் தொடர்ந்து 5-வது வெற்றியை பதிவு செய்த Marquez, நடப்பு தொடரில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். கடந்த இரு சுற்றிலும் முதலிடம் பிடித்த Yamaha அணியின் மேவ்ரிக் வினய்ல்ஸ் விபத்தில் சிக்க, அவர் ஹாட்ரிக் வெற்றிபெறும் வாய்ப்பை தவறவிட்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்பந்தயத்தை, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00