தண்டனைக் காலம் முடிந்த பின் களமிறங்கிய முன்னாள் உலக டென்னிஸ் சாம்பியனான மரியா ஷரபோவா தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்

Apr 27 2017 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக விளையாட தடை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிந்த பின் களமிறங்கிய முன்னாள் உலக டென்னிஸ் சாம்பியனான மரியா ஷரபோவா, தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

தடை செய்யப்பட்ட மெல்டோனியம் எனும் மருந்தை மரியா ஷரபோவா உட்கொண்டதால், டென்னிஸ் விளையாடுவதிலிருந்து 15 மாதங்களுக்கு தடை விதிக்கப்பெற்றார். தடைக்காலம் முடிந்து, தற்போது நடைபெற்று வரும் Stuttgart Grand Prix போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்ட ஷரபோவா, தனது முதல் போட்டியில் இத்தாலியின் ராபர்டோ வின்சியை தோற்கடித்தார். ஷரபோவா முதலில் தடுமாறினாலும் 3-6, 7-5 மற்றும் 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

இரண்டாம் சுற்றில் தனது சக நாட்டவரான மகரோவாவை எதிர்த்து விளையாடவுள்ளார் மரியா. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 30 வயதான ஷரபோவா, ஸ்டர்ட்கர்ட் கோப்பையை இதற்கு முன் மூன்று முறை வென்றுள்ளார். தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு இம்முறை தரவரிசைப்பட்டியலில் இடமளிக்கப்படவில்லை.

விதிகளுக்கு புறம்பாக மருந்தை உட்கொண்ட விவகாரத்தில், ஷரபோவாவுக்கு முதலில் இரண்டாண்டுகளுக்கு விளையாட விதிக்கப்பட்ட தடை, பின்னர் 15 மாதங்களாக குறைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00