இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் : பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Jun 18 2017 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

உலக ஹாக்கி லீக் அரையிறுதித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்ட இந்தியா, அபாரமாக விளையாடி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்திய வீரர்கள் சுனில், ஆகாஷ்தீப் சிங், சர்தார் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்நிலையில், இப்போட்டித்தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. லண்டனில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஐசிசி சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதும் நிலையில், உலக ஹாக்கி தொடரிலும் இவ்விரு அணிகளும் மோதுவது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00