இளையோர் அமெரிக்க கோப்பை பாய்மரப்படகுப் பந்தயம் - சாம்பியன் பட்டம் வென்று பிரிட்டன் அணி அபாரம்

Jun 22 2017 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

இளையோர் அமெரிக்க கோப்பை பாய்மரப்படகுப் பந்தய இறுதிச்சுற்றில், பிரிட்டன் அணி ஒட்டுமொத்தமாக முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

பெர்முடா கடற்பகுதியில் நடைபெற்ற இளையோர் அமெரிக்க கோப்பைக்கான பாய்மரப் படகு பந்தய இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு நியூசிலாந்து - பிரிட்டன் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 6 பந்தயங்களைக் கொண்ட இந்த இறுதிச்சுற்றின் கடைசி பந்தயம், இந்திய நேரப்படி இன்று நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது. கடைசி பந்தயத்தில் பிரிட்டன் அணி, 2-வது இடத்தைப் பிடித்த போதிலும், ஒட்டுமொத்தமாக 50 புள்ளிகள் பெற்று, இளையோர் அமெரிக்க கோப்பையை வென்று அசத்தியது. 2 புள்ளிகள் வித்தியாசத்தில் நடப்பு ஆண்டுக்கான கோப்பையை தவறவிட்டு நியூசிலாந்து அணி ஏமாற்றம் அளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00