குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் : செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், பல்கேரியாவின் டிமிட்ரோவ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம்

Jun 22 2017 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் Queens கிளப் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் முதலில் நடைபெற்ற போட்டி ஒன்றில், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், கனடாவின் இளம் வீரர் Denis Shapovalov-வை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய பெர்டிச், 7-6, 6-7, 7-5 என்ற செட்கணக்கில் Shapovalov-வை போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில், Queens கிளப் தொடருக்கான தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் டிமிட்ரோவும், ஃபிரான்சின் ஜுலியின் பென்னெட்டோவும் மோதினர். இப்போட்டியில், முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த டிமிட்ரோவ், பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-3, 6-4 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் வென்று அசத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் டிமிட்ரோவ் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00