ஹாலே ஓபன் டென்னிஸ் - முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

Jun 23 2017 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் Zverev-வை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்றுவரும் ATP அந்தஸ்துபெற்ற இத்தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில், 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும், ஹாலே ஓபன் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் Mischa Zverev-வை எதிர்கொண்டார். இப்போட்டியில், ஆரம்பம் முதலே தனது அபார சர்வீஸ்கள் மூலம் Zverev-வை திணறடித்த ஃபெடரர், 7-6, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் Florian Mayer-ஐ ஃபெடரர் சந்திக்கிறார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் கீ நிஷிகோரியும், ரஷ்யாவின் Karen Khachanov-வும் மோதினர். இப்போட்டியின் முதல் செட்டில் 3-2 என்ற கணக்கில் Khachanov முன்னிலையில் இருந்த நிலையில், காயம் காரணமாக நிஷிகோரி வெளியேறினார். இதனையடுத்து, Khachanov வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், சகநாட்டு வீரர் Andrey Rublev-வுடன் Khachanov மோதுகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00