இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் கும்ப்ளேவின் முடிவை மிகவும் மதிப்பதாக கேப்டன் விராட் கோலி பேட்டி

Jun 23 2017 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே, கும்ப்ளேவின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த விராட்கோலி, முதல்முறையாக தனது மவுனத்தை கலைத்து பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோலி, அனில் கும்ப்ளே தனது பார்வையில் இருந்து சில விஷயங்களை வெளிப்படுத்தியதாகவும், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் அவரின் முடிவை வீரர்கள் அனைவரும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வீரர்களின் ஓய்வறையில் என்ன நடந்தாலும் அது தங்களுக்குள்ளே இருக்க வேண்டும் என்பதிலும், ஒருபோதும் வெளியில் கசியக்கூடாது என்ற கலாசாரத்தை உருவாக்கி, அதை கடந்த 3-4 ஆண்டுகளாக கடைபிடித்து வருவதாகவும் கோலி குறிப்பிட்டார். எனவே வீரர்களின் அறையில் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது எனவும், அதன் புனிதத்தை கடைபிடிப்பது அவசியம் எனவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00