டென்மார்க்கில் நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி : உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கான ஒரு வார கால பயிற்சி தொடங்கியது

Jun 24 2017 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் 15 வயதிற்குட்பட்ட ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு செல்லும் இந்திய அணி வீரர்களுக்கான ஒரு வார கால பயிற்சி இன்று தொடங்கப்பட்டது.

டென்மார்க்கில் வரும் ஜூலை 9ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை டென்மார்க் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60 அணிகள் பங்கேற்கின்றன. இதையொட்டி, ஜூலை 16ம் தேதியிலிருந்து 23ம் தேதி வரை ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஸ்வீடனில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்குபெற இந்தியாவிலிருந்து பெங்களூர் கால்பந்து அகாடமி அணி மற்றும் டெல்லி கால்பந்து அகாடமி அணி ஆகிய இரு அணிகள் கலந்து கொள்ள உள்ளன. பெங்களூரு அகாடமி அணியினருக்கான பயிற்சி முகாம் உதகையில் இன்று தொடங்கியது. இதில் கால்பந்து வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, விளையாட்டு வீரர்களுக்காக நீலகிரியில் செய்து கொடுத்துள்ள பல்வேறு வசதிகளை கண்ட பெங்களூரு கால்பந்து அகாடமியின் மேலாளர் பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00