Halle Open டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை

Jun 26 2017 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

Halle Open டென்னிஸ் போட்டியில், சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஜெர்மனியின் Halle நகரில், நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில், 18 முறை Grandslam பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்தின் Roger Federer, ஜெர்மனியைச் சேர்ந்த Alexander Zverev-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தால் அதிரடியாக விளையாடிய Federer, 6-1, 6-3 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் Halle Open சாம்பியன் பட்டத்தை 9-வது முறையாக வென்று, Roger Federer சாதனை படைத்துள்ளார். இதனிடையே, விளம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பயிற்சி ஆட்டமான, Queen's Club டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதன் இறுதியாட்டத்தில், குரோஷியாவின் Marin Cilic, ஸ்பெயின் வீரர் Feliciano Lopez-ஐ எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய Lopez, 4-6, 7-6, 7-6 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

மகளிருக்கான Aegon Classic டென்னிஸ் போட்டி, இங்கிலாந்தின் Birmingham நகரில் நடைபெற்றது. இதில், செக் குடியரசின் Petra Kvitova, ஆஸ்திரேலிய வீராங்கனை Ashleigh Barty-ஐ, 4-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00