சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஸ்பெயினின் டேவிட் ஃபெர்ரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
Aug 18 2017 10:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஸ்பெயினின் டேவிட் ஃபெர்ரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்றுவரும் இந்த ATP டென்னிஸ் தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில், ஸ்பெயினின் டேவிட் ஃபெர்ரர், சகநாட்டு வீரர் கார்ரினோ பஸ்டாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், ஆரம்பம் முதலே தனது அபார சர்வீஸ்கள் மூலம் பஸ்டாவை திணறடித்த ஃபெர்ரர், 6-4, 6-4 என்ற நேர்செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில், சின்சினாட்டி தொடருக்கான தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஃபிரான்சின் அட்ரியன் மன்னாரினோவை, 7-6, 7-6 என்ற நேர் செட்கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.