அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் கோப்பைக்கான காலிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் தகுதி

Aug 19 2017 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் கோப்பைக்‍கான காலிறுதி சுற்றுக்‍கு, ஸ்பெயின் வீரர் Rafel Nadal மற்றும் ஆஸ்திரேலிய வீரர் Nick Kyrgios ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

அமெரிக்‍காவின் Ohio மாகாணம், சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்த டென்னிஸ் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றுக்‍கான தகுதி ஆட்டத்தில், ஸ்பெயினின் Rafel Nadal, சக நாட்டு வீரரான Albert Ramos Vinolas-ஐ எதிர்கொண்டு விளையாடினார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய Rafel Nadal, 7-6, 6-2 என்ற நேர்செட் கணக்‍கில் வெற்றி பெற்று காலிறுதிக்‍கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் Nick Kyrgios, Croatia வீரர் Ivo Karlovic ஆகியோர் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், Nick Kyrgios 4-6, 7-6, 6-3 என்ற செட் கணக்‍கில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் Nick Kyrgios, ஸ்பெயினின் Rafel Nadal-உடன் மோத உள்ளார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், Bulgaria-வின் Grigor Dimitrov-வும், அமெரிக்‍க வீரர் John Isner-ம் களம் காண உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00