உலக லெவன் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது

Sep 16 2017 9:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் நடைபெற்ற உலக லெவன் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்று சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றன. கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாபர் ஆசம் 48 ரன்னும், பகர் சமன் 27 ரன்னும் எடுத்தனர். உலக லெவன் அணியின் திசாரா பெரேரா இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.

தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 14 ரன்களில் உஸ்மான் கான் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 21 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அந்த அணி 10 ஓவர்களுக்குள் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி எட்டு விக்கெட்கள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 89 ரன்கள் எடுத்த அகமது ஷேசாத் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசம் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00