இந்தோனேசியா கால்பந்து வீரர் Choirul Huda விளையாட்டின்போது சகவீரர் மீது மோதியதால் ஏற்பட்ட காயத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்

Oct 17 2017 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியா கால்பந்து வீரர் Choirul Huda என்பவர் விளையாட்டின்போது சகவீரர் மீது மோதியதால் ஏற்பட்ட காயத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தோனேசியா நாட்டின் கால்பந்து வீரரான Choirul Huda, பெர்சிலா லமான்கான் கிளப் சார்பாக 500-க்கும் மேற்பட்ட போட்டியில் கோல் கீப்பராக விளையாடி உள்ளார். மேலும், அவர் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.

இந்நிலையில், Choirul Huda கிளப் சார்பாக நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர் அணியின் பந்தை தடுக்க முயன்றார். அப்போது, பிரேசில் வீரரான ரமன் ராட்ரிகஸுடன் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலுதவி அளித்த பின்னர், மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் Huda-விற்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், மூச்சுத் திணறி உயிரிழந்தார். அவரின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Huda மரணத்திற்கு அந்நாட்டின் கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள், சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00