ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி : மலேசியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி சாம்பியன்

Oct 23 2017 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், மலேசியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் மலேசியா அணியை நேற்று எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய வீரர் Ramandeep Singh முதல் கோல் அடித்தார். இதனைதொடர்ந்து 29-வது நிமிடத்தில் இந்திய வீரர் alit Upadhyay 2-வது கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டத்தில் மலேசிய வீரர்கள், இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 50-வது நிமிடத்தில் மலேசிய வீரர் Shahril Saabah தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். இதனையடுத்து இந்திய வீரர்கள் சுதாரித்து விளையாடியதால் இறுதிவரை மலேசிய அணியால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 3-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00