கடல்நீர், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க விழிப்புணர்வு : சென்னையில் மாரத்தான் 5,000 பேர் பங்கேற்பு

Nov 26 2017 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடல்நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்‍க பொதுமக்‍களுக்‍கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சென்னை இராயபுரம் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், திருவொற்றியூர் சுங்கச்சாவடி வரை சென்று, மீண்டும் அங்கிருந்து பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த ஓட்டத்தில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கடற்கரையோரத்தில் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்‍ கவர்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை விட்டுச்செல்லக்‍கூடாது என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் காசிமேடு பகுதி இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்‍கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதனிடையே, புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில், ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00