தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கானா வீரர் Ernast amuzu-வை வீழ்த்தினார் விஜேந்தர் சிங் - தொடர்ச்சியாக 10வது முறையாக வென்று சாதனை

Dec 24 2017 7:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெய்ப்பூரில் நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கானா வீரர் எர்னஸ்ட்டை விழ்த்தி இந்தியாவின் விஜேந்தர் சிங், டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் பட்டங்களை தக்கவைத்து கொண்டார்.

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங், இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் WBO Oriental மற்றும் ஆசிய பசிபிக் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். இந்நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கானாவின் Ernast amuzu-வை எதிர்கொண்டார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், விஜேந்தர் சிங் தொக்‍கத்திலிருந்தே சிறப்பாக விளையாடினார். தனது குத்துகளால் கானா வீரரை நிலைகுலைய செய்தார். 10 சுற்றுக்‍கள் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், நடுவர்களின் ஒருமித்த முடிவால் விஜேந்தர் சிங் வெற்றிபெற்றதாக அறிவிக்‍கப்பட்டார். இதன் மூலம் விஜேந்தர் WBO Oriental ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் பட்டங்களை தக்கவைத்து கொண்டார்.

இதுவரை 10 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடியுள்ள விஜேந்தர் சிங், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடியுள்ள, Ernast amuzu-வுக்‍கு இது 3-வது தோல்வியாகும். கடந்த வாரம் எர்னெஸ்ட், விஜேந்தரை 3 அல்லது 4-வது ரவுண்டிலேயே நாக் அவுட் செய்து வெளியேற்றுவேன் எனக்‍ கூறியிருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00