விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சி : பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

Dec 27 2017 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்திய கிரிக்‍கெட் அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் டுஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், திரைப்பட நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு நேற்று மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கிரிக்கெட் வீரர்கள், சச்சின் டெண்டுல்கர், தோனி, ரவீந்திர ஜடேஜா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால், அமிதாப் பச்சன், ஷாருக் கான், ரேகா, ஐஸ்வர்யா ராய், கங்கனா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00